நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக மாமல்லபுரம் உள்ளிட்ட வரலாற்று சின்னங்களை மே 15ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நாளுக்கு நாள் அதிகரிப்பதால் மறு உத்தரவு வரும்வரை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து இடங்களும் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.