தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் சுமார் 8000 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 10 ஆம் தேதியிலிருந்து கொரோனாவை கட்டுப்படுத்த புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 200 ரூபாயும், பொது வெளியில் எச்சில் துப்புபவர்களுக்கும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கும் 500 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மேலும் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்திவருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த ஒரே நாளில் கொரோனா தொற்றால் சுமார் 7987 நபர்கள் பாதிப்படைந்துள்ளனர். இதில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சென்னையில் 2558 நபர்கள் புதிதாக பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் தமிழகத்தில் இன்று மொத்தமாக சுமார் 9,62,935 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் சுமார் 8,91,839 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மேலும் இதில் 12,999 நபர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது