டிக்டாக்கில் மிகவும் பிரபலமான ஜி பி முத்து தற்போது செகனண்ட் கார் ஒன்றை வாங்கி வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கிராமத்தில் ஜி பி முத்து என்பவர் மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஜி பி முத்து பழைய கதவுகளை வாங்கி அதனை பழுது செய்து விற்பனை செய்யும் மரக்கடை நடத்தி வந்துள்ளார். மேலும் தற்போது ஜிபி முத்து டிக்டாக் என்ற செயலிலும் மிகப்பெரிய பிரபலம் அடைந்தவர். அதாவது “டிக் டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டாலே ஞாபகத்திற்கு வருபவர் ஜி பி முத்து தான் .
மேலும் பொழுதுபோக்கிற்காக வீடியோவை வெளியிட்டு வந்த ஜிபி முத்து ரசிகர்கள் கூட்டம் அதிகமானவுடன் அதனை முழுநேரமாக பயன்படுத்தி வந்தார். இவரின் நெல்லை பேச்சுக்கும் கிண்டலான நடிப்பிற்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இவருக்கு உள்ளது. இதனால் அவருக்கு ஏற்பட்ட அவமானங்களும் பழி சொற்களும் பிரச்சனைகளும் ஏராளமாக இருந்தன.
அதன் பிறகு டிக் டாக்கை அரசு திடீரென தடை செய்தவுடன் ஜிபி முத்துவுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. யூடியூபில் தனக்கு என்று ஒரு சேனலை உருவாக்கி அதில் அவரின் வீடியோக்களை பதிவிட்டு வந்தார் . இந்த யூடியூபில் அவருக்கு 3 லட்சத்திற்கும் மேலான சப்ஸ்க்ரைபர் இருந்துள்ளார்கள். மேலும் ஜி பி முத்து தொலைக்காட்சிகளிலும் காமெடி ஷோக்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தற்போது அவர் திரைப்படங்களிலும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையில் ஜி பி முத்து செகனண்ட் கார் ஒன்றை வாங்கி அதற்கு பூஜை செய்தும் தன் குடும்பத்திலேயே முதல்முறையாக கார் வாங்கியது நான்தான் என்று உருக்கத்துடன் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். பல அவமானங்களையும் கஷ்டங்களையும் தாண்டி இதனை சாதித்து இருப்பதாக ஜி பி முத்து கூறியுள்ளார்.