ஜாலியன் வாலாபாக் படுகொலை நினைவு தின நிகழ்ச்சி திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ச்சி என்.சி.சி. சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கமாண்டிங் அதிகாரி சந்தீப்மேனன் தலைமை தாங்கினார். இதில் என்.சி.சி. மாணவர்களுக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் தொடர்பாக குறும்படம் காண்பிக்கப்பட்டது.
அதேபோல் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்ய முடியாததால் அதனை தவிர்ப்பது குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர். திண்டுக்கல் நகரில் நான்கு பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பைகளை என்.சி.சி. மாணவர்கள் சேகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.