நெல்லையில் இளம்பெண் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் ரஞ்சிதா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் விஷத்தினை குடித்துள்ளார். இதனால் இவர் வீட்டில் மயங்கி விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் ரஞ்சிதாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு செல்லுகின்ற வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டையிலிருக்கும் காவல் நிலையத்தில் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு மட்டுமல்லாமல் தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.