மே 15ஆம் தேதி வரை அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது
இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,664 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் வரலாற்று நினைவு சின்னங்கள் அனைத்தையும் மே 15ஆம் தேதி வரை மத்திய அரசு மூட உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல், “அதிகரித்து வரும் கொரோனா தொற்றினால் தொல்பொருள் துறையின் கீழ் இயங்கி வரும் அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் போன்றவை மே 15ஆம் தேதி வரை மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.