Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் 10 நாட்கள்….. அரசு திடீர் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 10 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். இதனை 10 நாட்களில் 100% ஆக மாற்ற தமிழக அரசு புதிய செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. இது குறித்து தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |