Categories
மாநில செய்திகள்

15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள்…. உடனே வழங்க வேண்டும் – தமிழக அரசு கோரிக்கை…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே தமிழகத்திற்கு 15 லட்சம் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் மற்றும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |