Categories
லைப் ஸ்டைல்

முட்டை வாங்க போறீங்களா…? முட்டை பழசா? புதுசா?…. இப்படி செஞ்சி பாருங்க தெரிஞ்சிரும்…!!!

பழைய முட்டையை சோதனை மூலம் எப்படி கண்டுபிடிப்பது எப்படி என்பதை இப்பொது பார்க்கலாம்.

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நாம் நிறைய முட்டைகளை வாங்கி பிரிட்ஜில் வைத்து உபயோகிக்கிறோம். இந்நிலையில் நாம் அடிக்கடி பிரிட்ஜின் கதவை திறந்து மூடும்போது வெளிப்பகுதியிலும், உள்பகுதியிலும் நிலவும் வெப்பநிலை மாற்றம் முட்டையின் தன்மையை எதிர்மறையாக பாதிக்கும்.

எனவே அதிக நாட்கள் முட்டையை வாங்கி சேமித்து வைக்காமல் ஓரிரு நாட்களுக்கு மட்டும் தேவையானது வாங்குவது நல்லது.

கடைகளில் நாம் வாங்கி வரும் முட்டை புதியதா? பழையதா? என்பதை கண்டுபிடிக்க எளிய சோதனை.

1.ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி முட்டையை மெதுவாக உள்ளே போட வேண்டும். முட்டை முழுவதுமாக மூழ்கி டம்ளரின் அடியில் கிடைமட்டமாக ஒட்டியிருந்தால் அது புதிய முட்டை.

2.முட்டை டம்ளருக்குள் ஒருபக்கமாக சரிந்த நிலையில் காணப்பட்டால் அது ஒரு வாரம் ஆகிய பழைய முட்டை.

3.நன்றாக சாய்ந்த நிலையில் மிதந்து கொண்டிருந்தால் அது 2 அல்லது 3 வாரங்கள் பழையதான முட்டை என்று அர்த்தம். எனினும் அந்த முட்டை பயன்பாட்டுக்கு உகந்தது.

4.தண்ணீருக்குள் போட்டதும் முட்டை மேலே மிதந்து கொண்டிருந்தால் அந்த முட்டை ரொம்ப பழையது அல்லது கெட்டுப்போனது என்று அர்த்தம். அதனால் அந்த முட்டையை உணவிற்காக தவிர்ப்பது நல்லது.

கெட்டுப்போன அந்த முட்டையை சாப்பிடுவது உடல் உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் முட்டையின் உள்ளடுக்குகளில் இருக்கும் சால்மோனெல்லா எனும் ஒரு வகை பாக்டீரியா வளர்ச்சி அடைய ஆரம்பித்துவிடும். அதனை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளை ஏற்படுத்திவிடும்.

 

முட்டையை நம் காது பக்கத்தில் கொண்டு சென்று குலுக்கும்போது, சலசலவென்று சத்தம் வந்தால் அது கெட்டுப்போன முட்டை என்று அர்த்தம். இதேபோன்று முட்டையை உடைத்து பார்க்கும்போது வெள்ளைக்கருவின் நிறம் வெள்ளை நிறமாக இல்லாமல் பழுப்பு போய் இருந்தால் அந்த முட்டையும் கெட்டுப்போனதுதான். அதுபோல் மஞ்சள் கரு சிதறிய நிலையிலோ, கலங்கிய நிலையிலோ இருந்தாலும் அது கெட்டுப்போன முட்டை என்று தான் அர்த்தம்.

Categories

Tech |