Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை… சகதியில் சிக்கிய வாகனம்… போராடி மீட்ட சுற்றுலாபயணிகள்..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெய்த மழை காரணமாக சுற்றுலா வாகனம் சகதியில் சிக்கியது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் சாலை சீரமைப்பு பணிகள் பைன் மரக்காடுகள் பகுதியில் தற்போது நடைபெற்று வருகிறது. அந்த இடமே மழை காரணமாக சகதிக்காடாக மாறியுள்ளது. அதில் சுற்றுலா வாகனம் ஒன்று சிக்கிக்கொண்டது. இதன் காரணமாக பல மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் சாலையில் இருபுறமும் அணிவகுத்து நின்றன. சகதியில் சிக்கிய சுற்றுலா வாகனம் நீண்ட நேரம் ஆகியும் மீட்கப்படவில்லை.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து சிக்கிய சுற்றுலா வாகனத்தை சகதியில் இருந்து மீட்டனர். அதன் பின்பு போக்குவரத்து அப்பகுதியில் சீரமைக்கப்பட்டது. கொடைக்கானல் பகுதியில் பலத்த மழையால் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி நாசமானதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும் நடவு செய்யப்பட்டுள்ள பூச்செடிகளும் பிரையன்ட் பூங்காவில் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |