தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் குறைந்த அளவிலான பேருந்துகள் மற்றும் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.30, 9.45, 11.30, மதியம் 12, 1 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரல் காலை 9.50, 11.05, 12.50 மணிக்கு அரக்கோணம் வரை செல்லும் ரயில்கள், சென்ட்ரல் காலை 10, 11.45 மணி டு திருத்தணி வரை செல்லும் ரயில்கள், சென்ட்ரல் காலை 10.30, 12.30 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள் ஆகியவை இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இருக்காது.