Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும்…. வெளுத்து வாங்கும் மழை…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கோடை வெயில் தொடங்கியுள்ளதால் பெரும்பாலான இடங்களில் வெயில் வெளுத்து வாங்குகிறது. வெயிலின் தாக்கத்தை குறைத்து மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் வகையில் பல இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவே தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது.

கேரளா முதல் உள் கர்நாடக வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை மிதமான மழை பெய்யும்.

Categories

Tech |