தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்துவது பற்றி தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தளர்வில் எடுக்கும் கட்டுப்பாடுகளை தீவிரமாக இன்று காலை தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஏற்கனவே மருத்துவர்களுடன் நடத்திய ஆலோசனையில் சனி மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு பிறப்பிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், இன்று ஆலோசனைக்குப் பிறகு அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.