Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை… நிரம்பி வழிந்த ஏரிகள்… பெருக்கெடுத்த நீர்வீழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் விடிய, விடிய கொட்டித் தீர்த்த கன மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பகுதியில் கனமழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது. இதனால் பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் நட்சத்திர ஏரிகளும் நிரம்பி வழிந்தது. மேலும் உபரிநீர் வெளியேறி வருகிறது. அணைகளுக்கும் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. மழை பகுதிகளில் இருந்து பலத்த மழை காரணமாக நீரில் பாறாங்கற்கள், பாறைகள் ஆகியவை அடித்து வரப்பட்டு கொடைக்கானல்-வத்தலக்குண்டு மலைப்பகுதியில் சிதறிக் கிடந்தன.

இதனால் வாகனங்கள் அந்த மலைப்பாதை வழியாக செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைப்பு பணிகளை விரைந்து மேற்கொண்டனர். அதன் பின்னர் கொடைக்கானல் பகுதியில் நேற்று முன்தினம் 1 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்தது. இதனால் வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

Categories

Tech |