குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இந்த சீசனில் பங்கேற்ற பலரும் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுக்கும் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி அறிமுக இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்தரன் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் அஸ்வினுடன் புகழும் இணைந்து நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் ஹரி கூறியதாவது, இப்படம் முற்றிலும் காதல் கதையம்சம் கொண்டதாகும்.
ஆகையால் இந்த கதாபாத்திரம் அஸ்வினுக்கு மிகவும் பொருந்தும் என்பதால் இப்படத்தின் தயாரிப்பாளர் அவரை தேர்ந்தெடுத்தார். மேலும் புகழ் இப்படத்தின் மூலம் காமெடியில் தனக்கென ஒரு இடத்தை கட்டாயம் பிடிப்பார்.தற்போது மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து வருகிறோம். இதை தொடர்ந்து வரும் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது என்று கூறியுள்ளார்.