நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இறப்பு வீதங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 2,17,353 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1, 42,91,917 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1185 பேர் உயிரிழந்துள்ளனர். 1,18,302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 11,72,23,509 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.