நெல்லை தாமிரபரணி ஆற்றில் பெண் பிணம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலிருக்கும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைக்கு எதிராக சுமார் 55 வயதுடைய பெண் பிணம் கிடந்துள்ளது. இதனை அங்கு குளிக்க சென்ற மக்கள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதன்பின் இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.
அப்புகாரை ஏற்ற காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையிலான காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று பெண்ணின் பிரேதத்தை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.