அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான வேலைகள் நடந்து வருகின்றது. அதற்காக நன்கொடை வசூலிக்கப்பட்ட காசோலைகள் திரும்ப வந்து விட்டன.
இந்தியாவின் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தி மாவட்டத்தில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கான நன்கொடையை நாடு முழுவதும் விசுவ இந்து பரிஷத் அமைப்பு சென்ற ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வசூலித்து வந்தது.
அப்படி வசூல் செய்யப்பட்ட 15,000 வங்கி காசோலைகள் திரும்பி வந்துவிட்டன. இதனின் முக மதிப்பு ரூ. 22 கோடி ஆகும். அதிலும் இரண்டு காசோலைகள் அயோத்தியில் இருந்து பெறப்பட்டதாகும்.
இந்தக் காசோலைகள் திரும்ப வந்த காரணம் நன்கொடை அளித்தவர்களின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததும், சில தொழில்நுட்ப தவறுகளுமே காரணம் என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.