திருநெல்வேலியில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பிரசித்தி பெற்ற முத்துமாலை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதனை சுற்றியுள்ள மக்கள் அனைவரும் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இதற்கிடையே தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது.
இதனை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் நடைபெற்றது. அந்தவகையில் முத்துமாலை அம்மன் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. மேலும் முத்துமாலை அம்மன் கோவில் மூலவருக்கு கனிகளால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. இதனை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் கண்டுகளித்தனர்.