ஆரணி மாம்பாக்கம் அருகே அரசு மருத்துமனையில் பிரசவத்தின் போது பெண் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருங்கூர் கிராமத்தை சேர்ந்த அரிவிழிவேந்தன் மற்றும் ஜமுனா தம்பதியினர் . இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆன நிலையில் ஜமுனாக்கு தலை பிரசவத்திற்கு மாம்பாக்கம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார் .இன்று காலை பிரசவவலி வந்தது .
இதையடுத்து மருத்துவர்கள் அங்கு இல்லாததால் அங்குள்ள செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர் .அதன்பின் ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்தவுடன் ஜமுனாவிற்கு நச்சு குடல் வெளியில் வராததால் நிலை கவலை கிடமாக இருந்துள்ளார் . இதனால் மேல் சிகிக்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு 108 ற்கு போன் செய்தனர் . இதையடுத்து ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் ஜமுனாக்கு கொண்டு செல்லும் வழியில் சிகிக்சை அளித்ததாக கூறப்படுகிறது . இதனால் ரத்த போக்கு ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது . இதையடுத்து ஆரணி அரசு மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு வரும் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர்.
இதையடுத்து ஜமுனாவின் உடல் ஆரணி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது . ஜமுனாவின் உறவினர்கள் ஆரணி அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் . இதுகுறித்து மாம்பாக்க அரசுமருத்துவமனை மருத்துவர்கள் எந்தவித கருத்தும் தெரிவிக்காததால் ஜமுனாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .