சாலையில் சுற்றித்திரிந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் அதிகாலை 7 மணி அளவில் அப்பகுதியில் திடீரென ஒரு காட்டு யானை நுழைந்துவிட்டது. இதனையடுத்து அந்த காட்டு யானை அப்பகுதியில் உள்ள சாலைகளில் அங்குமிங்கும் நடந்து சென்றதை பார்த்தவுடன் பொதுமக்கள் அச்சத்தில் தங்களது வீடுகளுக்கு சென்று விட்டனர்.
மேலும் காட்டு யானையை பார்த்த உடன் வாகனங்களில் சென்றவர்கள் வாகனங்களை அந்த இடத்திலேயே நிறுத்தி விட்டு அலறி அடித்து ஓடி விட்டனர். அதன் பிறகு அருகில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டத்தில் காட்டு யானை புகுந்து விட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.