புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கறம்பக்குடி பகுதியில் இளைஞர்களை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்ததைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணத்தில் இரண்டு இளைஞர்களை படுகொலை செய்துள்ளனர். இந்நிலையில் படுகொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் படுகொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு தலா 1 கோடி வழங்க வலியுறுத்தியும் கறம்பக்குடி பகுதியிலுள்ள சீனிக்கடைமுகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வரத்தினம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட துணைசெயலாளர் சந்திரபாண்டியன் மற்றும் ஊர் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.