Categories
உலக செய்திகள்

அவன் சாகல என் கூடவே தான் இருக்கான்… காதலின் உருக்கமான கடிதம்… இணையதளத்தை உலுக்கும் காதல் கதை…!!!

பிரித்தானியாவில் மறந்த காதலனுக்கு இலங்கை பெண் நேத்ரா மனம் உருகி எழுதிய கடிதம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரித்தானியாவின் பிரபல நடிகரான Nicholas Lyndhurstவின் மகனான ஆர்ச்சி என்பவர் இலங்கை வம்சாவளியை சேர்ந்த நேத்ரா என்ற பெண்ணை காதலித்துள்ளார். இவர்களின் காதல் 2 ஆண்டுகள் கூட நிறைவுபெறாத நிலையில் ஆர்ச்சிக்கு அபூர்வ வகை ரத்த புற்றுநோய் ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு உயிரிழந்தார். பல ஆண்டு ஒன்றாக வாழ்ந்தவர்களே பிரிந்து செல்லும் இந்த காலகட்டத்தில்  சிறிது காலமே காதலித்து இறந்து போன ஆர்ச்சின் நினைவாகவே நேத்ரா வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் முதன்முதலில் தாங்கள் சந்தித்துக்கொண்ட ஏப்ரல் 12ஆம் தேதி நாளை நினைவு கூறும் வகையில் நேத்ரா ஆர்ச்சிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில் உன்னை நான் சந்தித்த பின்பு தான் என் வாழ்வே மாறிபோனது என்றும், உன்னை சந்தித்த முதல் நாளில் இருந்து நீ என்னை மகிழ்ச்சியாகவே வைத்துக் கொண்டாய் என்றும் எழுதியுள்ளார். அதற்கு நன்றி என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து நான்  உன்னை மீண்டும் ஒரு நாள் சந்திப்பேன் என்றும், அந்த நாளை எதிர்கொண்டு காத்திருக்கிறேன் என்றும் உணர்ச்சிவசமிக்க கடிதத்தை எழுதியுள்ளார். தற்போது மறந்த தன் காதலனான ஆர்ச்சிக்கு நேத்ரா எழுதிய காதல் கடிதம் இணையத்தில் வைரலாகி அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

Categories

Tech |