Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

69 வயதாகியும் திருமணமாகல… பெண் துப்புரவு தொழிலாளியின் விபரீத முடிவு… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பெண் துப்புரவு தொழிலாளி தனியாக இருந்ததால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டத்திலுள்ள மிஷனரி ஹில் பகுதியில் ராஜாமணி என்ற பெண் துப்புரவு தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு 69 வயதாகியும் திருமணமாகாமல் தனது தம்பி குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் துப்புரவு தொழிலாளியாக ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரிக்கு துப்புரவு பணிக்கு சென்ற ராஜாமணி வகுப்பறைகளை சுத்தம் செய்துவிட்டு, என்சிசி மாணவிகள் உடை மாற்றும் அறையை சுத்தம் செய்வதாக கூறிவிட்டு அங்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது ராஜாமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ராஜாமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜாமணி குணமடைந்து வீடு திரும்பிய பிறகு தன்னை கவனிக்க ஆளில்லாமல் தனிமையில் வாடுகிறேன் என்று பிறரிடம் கூறியுள்ளார். எனவே ராஜாமணி மன அழுத்தத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories

Tech |