புதுக்கோட்டை மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயிப்பட்டி பகுதியில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்தார் இவர் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் பெருந்திணை பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த கார் ஒன்று விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விக்னேஸ்வரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரனை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.