Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இலவச சிறப்பு முகாம்… தாசில்தார் உட்பட 317 பேருக்கு தடுப்பூசி… மருத்துவ அலுவலர் தலைமை..!!

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் கொரோனா தடுப்பூசி தாசில்தார் உட்பட 317 பேருக்கு போடப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி பகுதியில் அரிமா சங்கம் லயன்ஸ் கிளப் மற்றும் பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் இலவச தடுப்பூசி முகாம் சிங்கம்புணரி தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்த முகாம் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் நபிஷா பானு தலைமையில் நடைபெற்றது. இதில் அரிமா சங்க செயலாளர் முருகேசன், தலைவர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் 45 வயதானவர்களுக்கு மருத்துவ பரிசோதனை டாக்டர் முத்துலட்சுமி தலைமையில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அவர்களுடைய ஆதார் காடுகளை கண்காணித்து அதற்கு முன்னதாக அவர்கள் தடுப்பூசி போட்டுள்ளார்களா ? என்பது குறித்து கேட்டறிந்து தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் 317 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதில் சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசும் பொதுமக்களுடன் இணைந்து தடுப்பூசி போட்டு கொண்டார்.

Categories

Tech |