Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… என்ஜினீயருக்கு நடந்த விபரீதம்… பெரம்பலூரில் கோர சம்பவம்..!!

பெரம்பலூர் அருகே என்ஜினீயர் லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசியலூரில் ராஜரத்தினம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமிர்த்தியாசன் என்ற மகன் உள்ளார். இவர் என்ஜினீயரிங் பட்டதாரி. இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியில் வசித்து வரும் முத்து ராஜேந்திரன் என்பவரது மகன் சுபாஷும் அமிர்த்தியாசனும் பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு அதன் பின் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். எசனை காட்டு மாரியம்மன் கோவில் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த டிப்பர் லாரி ஒன்று டிராக்டர் ஒன்றின் மீது மோதிவிட்டு சுபாஷ், அமிர்த்தியாசன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

அதில் அமிர்த்தியாசன் உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சுபாஷ் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சுபாஷ் மற்றும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவர்களை சமாதானப்படுத்தினர். இந்த விபத்து குறித்து பெரம்பலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |