Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தமிழர்களின் வாழ்வியலை தேடும் பணி… ஏழாம் கட்ட ஆராய்ச்சியில்… புதிய கண்டுபிடிப்பு..!!

சிவகங்கை மாவட்டம் அகரத்தில் ஏழாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் நத்தை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் எழாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் அகழ்வாராய்ச்சி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கீழடியில் மணிகள், பாசிகள், சிறுவர்கள் விளையாடும் சில்லுவட்டுகள், மண் கிண்ணங்கள், சேதமுற்ற நிலையில் பானைகள், பழங்கால வெள்ளை பாசிகள் ஆகியவை கிடைத்துள்ளன. அதேபோல் கொந்தகையில் அகழ்வாராய்ச்சியின் போது முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டது.

குறிப்பாக முதுமக்கள் தாழி வாய்ப்பகுதி மூடிய நிலையில் முழுமையாக கிடைத்துள்ளது. இதேபோல் அகரத்தில் தானியங்களை சேகரித்து வைக்கும் மண் குலுமையும், பானைகளும் கிடைத்துள்ளது. மேலும் தற்போது அகரத்தில் நத்தை ஓடுகள் அதிகமாக கிடைத்துள்ளது. அவற்றை சிறிது, பெரிது என தனித்தனியாக தரம் பிரித்து கவரில் சேமித்து எடை போடும் பணி நடைபெற்று வருகிறது.

Categories

Tech |