புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தொற்று பரவுவதை தடுப்பதற்க்காக மத்திய மற்றும் மாநில அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையின் போது ஒரே நாளில் 62 பேருக்கு தொற்று இருப்பது சோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 822 பேர் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதனால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 381 ஆக உள்ளது.