Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2ஆம் அலை…. இந்தியாவிற்கு விரைவில் வருகிறது ஸ்புட்னிக்….!!!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து விரைவில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கொரோனா இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு ஊசியை அவசர காலத் தேவைக்குப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே கோவிஷில்டு, கோவாக்ஸின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஸ்புட்னிக் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க அனுமதிக்கப்பட்டுள்ள மூன்றாவது தடுப்பூசி ஸ்புட்னிக் ஆகும். இதனையடுத்து இந்த மாத இறுதிக்குள் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று ரஷ்யாவிற்கான இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |