கோடைகால சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சிம்ஸ் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்காவில் மலர் செடிகளும், நூற்றாண்டு கால பழமைவாய்ந்த காகிதம், யானைக்கால், ருத்ராட்சை போன்ற ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. கடந்த ஜனவரி மாதம் 23 ரகங்களை சேர்ந்த 3 லட்சத்து 10 ஆயிரம் மலர் நாற்றுகள் கோடை சீசனை முன்னிட்டு நடைபெறும் மலர் கண்காட்சிக்காக பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ளன.
இதனை அடுத்து புதிய மலர் தொட்டிகள் கண்ணாடி மாளிகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆண்டு கண்ணாடி மாளிகையில் 3 ஆயிரம் மலர் நாற்றுகளை தொட்டியில் அடுக்கி வைக்க திட்டமிடப்பட்டு இருக்கின்றது. எனவே ஊழியர்கள் பூங்கா நர்சரியில் மலர் நாற்றுகளை பராமரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.