Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மரமெல்லாம் இப்படி சாயுமுன்னு நினைக்கல…. கொட்டித் தீர்த்த கனமழை…. வாகன ஓட்டிகள் பாதிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் வீடுகளில் இருந்த தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன.

தமிழகத்தில் கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் மற்றும் மேற்பனைக்காடு பகுதியில் சூறைக்காற்றுடன் சுமார் ஒரு மணிநேரம் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் கிராமத்தில் பல்வேறு வீடுகளிலுள்ள தென்னை மரங்கள் சாய்ந்துள்ளன.

இதனையடுத்து பேருந்து நிலையம் மற்றும் சாலைகளில் மழை நீர் தெப்பம் போல் தேங்கி நின்றுள்ளது. மேலும் கிராமத்தில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Categories

Tech |