சென்னையில் 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அவற்றை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகராட்சி விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதிலும் சென்னையில் அதிக அளவில் கொரோனா தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. முக கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பும் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் சென்னையில் வரும் 19ஆம் தேதி அதிகாலை 12 மணி முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு என்ற செய்தி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த தகவல் உண்மை இல்லை என்று சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. இந்தத் தகவலை மக்கள் யாருக்கும் பகிர வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.