Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நீ எதுக்கு வந்து மோதுன…. நல்ல வேளை உயிர் சேதம் எதும் ஆகல…. சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்தினால் பரபரப்பு…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து கவிழ்த்து விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று மதுராந்தகத்திலிருந்து அச்சரப்பாக்கம் வழியே புஞ்சை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அச்சரப்பாக்கம் நெடுஞ்சாலையிலிருந்து சர்வீஸ் சாலையில் திரும்பும் போது பின்னால் வந்த வாகனம் மோதியதால் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 7  பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர்.

இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த விபத்துக்கு காரணமான வாகனம் டிரைவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |