பெரம்பலூரில் லாரி மோதி மாட்டுவண்டி விபத்துக்குள்ளானதில் மாடு பரிதாபமாக உயிரிழந்தது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கை கிராமத்தில் வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கணேசன் என்ற மகன் உள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அகரம்சீகூர் கிராமத்திற்கு மாட்டு வண்டியில் வைக்கோல் ஏற்றி வருவதற்காக சென்று கொண்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது மாட்டுவண்டி மீது ராட்சத லாரி ஒன்று திடீரென மோதியது. அதில் மாடு பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. இது குறித்து மங்களமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.