இளவரசர் ஹரி இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிந்த 24 மணி நேரத்தில் பிரிட்டனை விட்டு வெளியேறுவார் என அரச குடும்ப நிபுணரும் எழுத்தாளருமான Ingrid Seward தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் மகாராணியாரின் இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி வின்சர் கோட்டையில் காலமானார். இவரது உடல் ஏப்ரல் 17ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இளவரசர் ஹரி தாத்தாவின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் வந்துள்ளார். இவர் தற்போது Frogmore Cottage-ல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். இளவரசர் ஹாரி அரச குடும்பப் பொறுப்புகளிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.
மேலும் இளவரசர் ஹரியின் மனைவி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் அவர் விமான பயணம் மேற்கொள்ள கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளவில்லை. இதனால் இளவரசர் ஹாரி தனது தாத்தாவின் இறுதி சடங்கு முடிந்த 24 மணி நேரத்திற்குள் அமெரிக்கா திரும்புவார் என அரச குடும்ப உறுப்பினரும் எழுத்தாளருமான Ingrid Seward ஒரு அமெரிக்க வார இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.