பெரம்பலூரில் மோட்டார் சைக்கிள் லாரி மீது மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அத்தியூர் புதுக்கோட்டை கிராமத்தில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்தார். இவர் குளிர்பான கடை ஒன்றை லெப்பைக்குடிக்காட்டில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் அகரம்சீகூரிலிருந்து அத்தியூர் புதுப்பேட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அவர் அகரம்சீகூர் தடுப்பணை அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளை வேகமாக மோதியது. அதில் சம்பவ இடத்திலேயே மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் மணிகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.