Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வேலைக்குப் போறவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. திருநெல்வேலியில் பரபரப்பு….!!

நெல்லையில் தபால் நிலையத்தின் ஊழியர் லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அன்பரசி என்பவர் வசித்து வந்தார் இந்நிலையில் இவர் நெல்லை மாவட்டம் மானூரில் அமைந்திருக்கும் தபால் நிலையத்தினுள் உதவி அலுவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் வழக்கம்போல தனது பைக்கில் கட்டாரங்குளம் அருகே தபால் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இவருக்கு பின்னால் வந்த லாரி திடீரென்று அன்பரசி பைக்கில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |