Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

6 லட்சம் எங்கே..? எங்களுக்கு சாலை அமைத்து தரனும்…. பாய் – தலையணையுடன் அமர்ந்து மக்கள் போராட்டம்..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கியும் சாலை பணி தொடராததால் ஊர்பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியிலுள்ள பாவேந்தர்,  பாரதிதாசன்  மற்றும் ராஜம்மாள் ஆகிய தெருக்களில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்க 6 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி ஒதுக்கி 6 மாத காலமாகியும் இதுவரை எந்தவித வேலையும் தொடங்க வில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்  சாலை அமைக்கும் பணி தொடராததை கண்டித்து 50 க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பாய் மற்றும் தலையணையுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஊராட்சி மன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |