Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இதை எதிர்பார்க்கவே இல்லை… திடீரென தாக்கிய மின்னல்… பரிதாபமாக இறந்த உயிர்கள்..!!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே 5 ஆடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக செத்தன.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அசூர் கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் முப்பது ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறார். இந்நிலையில் குன்னம் பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அப்போது அசூர் கிராமத்தின் எல்லை பகுதியான சித்தளிக்கு செல்லும் சாலையில் ராமகிருஷ்ணன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

அதில் தனியாக 5 ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் அப்பகுதியில் தாக்கியது. அதில் உடல் கருகி 5 ஆடுகளும் பரிதாபமாக செத்தன. இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் கண்ணனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |