Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ரொம்ப நாளாகவே இதால அவதிப்பட்டு வந்துருக்காங்க…. பெண் எடுத்த விபரீத முடிவு…. நெல்லையில் பரபரப்பு….!!

திருநெல்வேலியில் இளம்பெண் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பண்டாரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான மதுபாலா கடந்த சில நாட்களாகவே வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதில் மன உளைச்சலடைந்த மதுபாலா வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு பூச்சி மருந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்தார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் மதுபாலாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |