திருநெல்வேலியில் பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடலில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளான மாரிச்செல்வி அதே பகுதியிலிருக்கும் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாரிசெல்விக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டில் யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.