ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்துவது என பிரான்ஸ் அரசு முடிவு செய்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான தடுப்பூசிகளை செலுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் டென்மார்க் நாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு ரத்த கட்டி பிரச்சனை ஏற்படுவதால் ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்பான தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துவதாக அறிவித்திருந்தது.
ஆனால் இதனை கண்டுகொள்ளாமல் ஆஸ்ட்ராசெனகா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசிகளை தொடர்ந்து பயன்படுத்துவது என பிரான்ஸ் முடிவு செய்துள்ளது. ஆனால் சில நாடுகள் இந்த இரண்டு நிறுவன தடுப்பூசிகளையும் பயன்படுத்தாதது குறிப்பிடத்தக்கது.