திருநெல்வேலியில் திருட்டு வழக்கு தொடர்பாக 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வானமாமலை என்பவரும் வசித்து வருகிறார். இதற்கிடையே முன்னீர்பள்ளத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து காவல்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமாரின் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த வழக்கிற்காக காவல்துறையினர் ஐயப்பன் மற்றும் வானமாமலை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிளையும், நகைகளையும் கைப்பற்றியது.