Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் ஆசை…. இதில் தான் என் உடல் செல்ல வேண்டும்…. இறப்புக்கு முன்னர் செய்த இறுதிச்சடங்கு ஏற்பாடு….!!

இளவரசர் பிலிப் தான் இறந்த பிறகு உடலை சுமந்து செல்ல வாகனம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இளவரசர் பிலிப் தன் இறப்பிற்கு முன்னரே தன் இறுதி சடங்கிற்கான  ஏற்பாடுகளை செய்துள்ளார். அவர் தான் இறந்த பின்பு தன் உடலை சுமந்து செல்வதற்காக Land Rover வாகனத்தை வடிவமைத்துள்ளார்.

அந்த வாகனம் இளவரசரின் 82 வயதின் போது அதாவது சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனம் சவப்பெட்டி ஒன்றை சுமக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வாகனங்களுக்கு இணையான அடர் பச்சை வண்ணம் பூசப்பட்டுள்ளது. இளவரசர் பிலிப் புதுமையாகவும், சிறப்பாகவும் அந்த வாகனத்தை வடிவமைத்துள்ளார், இந்நிலையில் இளவரசரின் விருப்பத்தின்படி நாளை Land Rover வாகனம் தான் அவரின் உடலை சுமந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |