Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்… ரயில்கள் தொடர்ந்து இயங்கும்…!!

இந்தியாவில் அனைத்து விதமான ரயில்கள் இயங்கும் என்றும், மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று ரயில்வே வாரிய தலைவர் சுனித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டுவர மாநில அரசு, மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது.

இதனை பயன்படுத்தி  பலரும் ரயில்கள் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தவறான தகவல்களை ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் அனைத்து விதமான ரயில்களும் தொடர்ந்து இயங்கும் என்றும், பொதுமக்கள் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் ரயில்வே வாரியத் தலைவர் சுனித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

Categories

Tech |