கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவருவதால் படப்பிடிப்புகள் தடை செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை வாட்டி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து துறைகளும் முடக்கப்பட்டது. இதனால் சீரியல்களும் ஒளிபரப்பாகவில்லை.
அதன் பிறகு கட்டுபாடுகளுடன் சில பணிகள் தொடங்க உத்தரவு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தற்போது கொரோனா மீண்டும் வேகம் எடுத்து வருவதால் மகாராஷ்டிராவில் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.