Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒன்றோடொன்று உரசிய சரவெடி… வெடி விபத்தில் சிக்கியவர்கள்… அதிர்ச்சியில் தொழிலாளர்கள்…!!

விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி பெண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதானந்த புரத்தில் தேசிங்குராஜா என்பவர் வசித்து வருகிறார்.இவர் தனக்கு சொந்தமாக  ஓர் பட்டாசு ஆலையை அப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் வழக்கம்போலவே பட்டாசு தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. அப்போது தொழிலாளர்கள் பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபட்டு  கொண்டிருந்தபோது திடீரென சரவெடிகள் ஒன்றோடு ஒன்று உரசியதால் பயங்கர சத்ததுடன் வெடித்து விட்டது.

இதனையடுத்து அருகில் இருக்கும்  அறையில் வேலை செய்து  இருந்த தொழிலாளர்கள் பயத்தில் அங்கிருந்து வெளியேறி விட்டனர். ஆனாலும் இந்த வெடி விபத்தில் ஆதிலட்சுமி, செந்தில் ,முத்துமாரி, சுந்தரபாண்டியன் போன்றோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்த நான்கு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆதிலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

மேலும் செந்தில், முத்துமாரி மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோருக்கு அதிகமான தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து  வருகின்றனர். இந்த வெடி விபத்து குறித்து வாடியூர் கிராம நிர்வாக அதிகாரி மல்லிகா என்பவர் ஆலையின் உரிமையாளரான தேசிங்ராஜா, போர் மேன் தங்கேஸ்வரன், மேற்பார்வையாளர், ஆகியோர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தேசிங்கு ராஜா உட்பட  3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |