Categories
உலக செய்திகள்

ஊரடங்கினால் நல்லது கூட நடக்குமா….? பாதுகாக்கப்பட்ட 2300 உயிர்கள்…. தெரிவித்தது வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம்….!!

கொரோனா உரடங்கின் காரணமாக சுமார் 2,300 பேர் உயிர் பாதுகாக்கபட்டுள்ளதாக வளி கண்காணிப்பாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பிரான்சில் கொரோனா வைரஸ் கடந்த 2020 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஊரடங்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் பிரான்ஸ் முற்றிலும் முடங்கி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் காற்று மாசு அளவு வெகுவாக குறைந்துள்ளது. அதாவது எரிபொருள் மூலம் காற்று மாசடைதல் குறைந்ததால் நைட்ரஜன் டை ஆக்சைடு முற்றிலுமாக அழிந்துள்ளது.

இதனால் வளி மண்டலம் முற்றிலுமாகத் தூய்மையாக உள்ளதால் 2300 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது வலி கண்காணிப்பாளர் நிறுவனம் தகவலை தெரிவித்துள்ளது. இந்த வளி மாசடைதலினால் கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டிற்குள் சுமார் 40,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை கணக்கில் வைத்து பார்க்கும்போது 2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரோனா உரடங்கினால் 2300 பேரின் உயிர் பாதுகாக்கப்பட்டுள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |