பிரான்சில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரான்சிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் அதிக பலி எண்ணிக்கையில் பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. உலகளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதனிடையே பிரான்சில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல்அலை உருவானபோது 30,௦00 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது அதையும் சேர்த்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100,073 ஆக அதிகரித்துள்ளது.